0:00 / 05:18
குஷ்பு சாயலில் ஹன்சிகா இருப்பதாக பலரும் ஒப்பிட்டு பேசி வருகின்றனர். சின்ன குஷ்பு என்றும் அவரை அழைக்கிறார்கள். ஹன்சிகா தற்போது குஷ்பு கணவர் சுந்தர் சி. இயக்கும் ‘அரண்மனை’ என்ற பேய் படத்தில் நடித்து வருகிறார்.
குஷ்புவுடன் தன்னை ஒப்பிடுவது குறித்து ஹன்சிகா கூறியதாவது:–
குஷ்பு சிறந்த நடிகை. அவர் சாயலில் நான் இருப்பதாக பேசுகின்றனர். ஒரு தடவை குஷ்பு என்னுடன் போனில் பேசினார். நான் நல்ல படங்களை தேர்வு செய்து சிறப்பாக நடிப்பதாக பாராட்டினார். என்னைவிட நன்றாக நடிக்கிறாய் என்றும் கூறினார். இப்படி அவர் சொன்னதை என்னால் ஏற்க முடியாது.
எப்போதுமே குஷ்புதான் சிறந்த நடிகை. குஷ்பு கணவர் இயக்கும் படத்தில் நடிக்கிறேன். இதன் மூலம் எங்களுக்குள் நல்ல நட்பு ஏற்பட்டு உள்ளது. அவர்கள் குடும்பம் மிகவும் இனிமையானது. ‘அரண்மனை’ படத்தில் என் நடிப்பை பார்த்து குஷ்பு புகழ்ந்தார். எனக்கு அவர் நிறைய ஆலோசனைகளும் சொல்லி இருக்கிறார். என்னை ஊக்கப்படுத்துவதாக அவை உள்ளன.
இவ்வாறு ஹன்சிகா கூறினார்.
