0:00 / 05:18
சில ஆண்டுகளுக்கு முன் ஒரு சேனலின் ரியாலிட்டி ஷோவில் நடிகர் சிம்புவுடன், சின்னத்திரை பிரபலம் பிரித்விராஜ் (பப்லு) மோதினார். இதில் சிம்பு ‘எனக்கு நடிக்க தெரியாது’ என்று சொல்லி அவர் பண்ணிய அலப்பறைகள் தான் நமக்கே தெரியும்.
நீண்ட நாட்களாக இந்த நிகழ்ச்சி குறித்து மௌனம் காத்து வந்த பிரித்வி சமீபத்தில் மனம் திறந்துள்ளார். இதில் ‘நானும் சிம்புவும் சண்டையிட்டது எல்லாமே முன் கூட்டிய பேசி வைத்த ப்ளான் தான். இதனால் அந்த தொலைக்காட்சிக்கு டி.ஆர்.பி ரேட்டிங் ஒரே இரவில் 27 புள்ளிகள் உயர்ந்தது. ஆனால் நடிக்க வந்ததன் பிறகு மக்களை ஈர்க்க ஏதாவது பண்ணித்தானே ஆகணும்..?’ என்று இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு தற்போது கூறியுள்ளார்.
இதன் மூலம் விஜய்டிவி டிஆர்பி ரேட்டிங் வேண்டும் என்பதற்காக தமிழர்களை இவ்வளவு நாள் ஏமாற்றி வருகின்றது என தெளிவாக தெரிகின்றது. விஜய் விருதுகளும் பெரிய நடிகர்களை அழைத்து போலியாக விருது கொடுத்து கௌரவிக்கிறது.
'விஜய் விருதுகள் 100 தகுதி உள்ளவர்களுக்கு கிடைக்காமல் இருக்கலாம், ஆனால் ஒரு தகுதியற்றவருக்கு கூட கொடுக்க மாட்டோம்' இப்படி வசனம் பேசித்தான் எல்லாரையும் ஏமாற்றி வருகின்றனர்.
ஒரு பக்கம் சீரியல் சேனல். மற்றொரு பக்கம் ரியாலிட்டி சோ சேனல். மக்களே இப்போவது விழித்துக்கொள்ளுங்கள். பொழுது போகலைனா டி.வி. பாருங்க. அவங்க பொழுத கழிக்கிறதுக்கு நீங்க நேரத்தை வீணடிக்காதீர்கள்.