சில ஆண்டுகளுக்கு முன் ஒரு சேனலின் ரியாலிட்டி ஷோவில் நடிகர் சிம்புவுடன், சின்னத்திரை பிரபலம் பிரித்விராஜ் மோதினார். இதில் சிம்பு ‘எனக்கு நடிக்க தெரியாது’ என்று சொல்லி அவர் பண்ணிய அலப்பறைகள் தான் நமக்கே தெரியும்.
நீண்ட நாட்களாக இந்த நிகழ்ச்சி குறித்து மௌனம் காத்து வந்த பிரித்வி சமீபத்தில் மனம் திறந்துள்ளார். இதில் ‘ நானும் சிம்புவும் சண்டையிட்டது எல்லாமே முன் கூட்டிய பேசி வைத்த ப்ளான் தான். இதனால் அந்த தொலைக்காட்சிக்கு டி.ஆர்.பி ரேட்டிங் ஒரே இரவில் 27 புள்ளிகள் உயர்ந்தது.ஆனால் நடிக்க வந்ததன் பிறகு மக்களை ஈர்க்க ஏதாவது பண்ணித்தானே ஆகணும்..?’ என்று இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு தற்போது கூறியுள்ளார்.