0:00 / 05:18
விஜய்60 டைட்டிலை ஓகே செய்த தளபதி!ஆனால் இது அவருக்கு பிடிக்கவில்லையாம் இருந்தும் ஓகே செய்ய இதுவா காரணம்!
அழகிய தமிழ் மகன் படத்தை அடுத்து பரதன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 60-வது படத்தின் வேலைகள் துரிதமாக நடந்து வருகிறது. முதன்முறையாக விஜய் முழு கிராமத்து கதையில் நடிக்கிறார்.
அந்த வகையில் பங்காளி சண்டையே இந்த படத்தின் பிரதானமாகியிருக்கிறதாம். கிராமத்து அப்பாவியாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு விஜய்யை உறவுக்காரர்களே ஏய்த்துக்கொண்டிருப்பார்களாம்.
இருந்து கிராமத்துக்கு வரும் விஜய்க்கு இந்த விசயம் தெரிய வரும்போது அப்பாவி விஜய்க்காக சாட்டையை கையிலெடுப்பாராம்.
இப்படித்தான் எங்க வீட்டுப்பிளை படத்திலும் அப்பாவி எம்ஜிஆரை நம்பியார் சாட்டையால் அடி அடியென்று அடக்கி வைத்திருப்பார்.
துணிச்சலான இன்னொரு எம்ஜிஆர் அவர் இடத்துக்கு சென்று நம்பியாரை பின்னி எடுப்பார். அந்தவகையில், அந்த பாணியில்தான் விஜய் படத்தின் கதையும் உருவாகியிருக்கிறதாம்.
இந்த படத்திற்கு எம்ஜிஆர் படத்தின் தலைப்பினை வைப்பதற்கு தயாரிப்பாளர் தரப்பு ஏற்கனவே முடிவு செய்தபோதும் விஜய்க்கு ஓகே இல்லாமல் இருந்து வந்தது.
இப்போது படத்தின் கதையோட்டத்தைப் பார்க்கையில் அந்த டைட்டீல்தான் பொருத்தமாக இருக்கும் என்று ஓகே பண்ணி விட்டாராம் விஜய்.
எங்கவீட்டுப்பிள்ளை என்ற டைட்டீல் விரைவில் விஜய் 60-வது படத்தின் பர்ஸ்ட் லுக்கோடு அறிவிக்கப்பட உள்ளதாம்.