0:00 / 05:18
விஜய் 60யிலும் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்
கபாலி படத்தையடுத்து விஜய்யின் 60வது படத்திற்கு இசையமைத்துகொண்டிருக்கிறார் சந்தோஷ் நாராயணன்.
இசையமைக்கும் படங்களில் ப்ரோமோஷனுக்காக ஹீரோக்களை பாட வைப்பதில்லை. பாடல்களின் தேவைக்கேற்ப புதிய குரல்களையே தேடி பாடவைப்பார்.இந்நிலையில், பரதன் இயக்கி கொண்டிருக்கும் பெயர் வைக்கப்படாத விஜய்யின் 60வது படத்திற்கு விஜய்யின் குரலுக்கேற்ற டியூன் கிடைத்துள்ளதாகவும், அதற்கான பாடல் எழுதப்பட்டு விட்டதாகவும்படக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இதனால், படக்குழு படப்பிடிப்பிற்காக ஐரோப்பா செல்வதற்கு முன்னதாகவே அந்த பாடலை விஜய் பாடுகிறாராம். ஐரோப்பாவின் அழகிய இயற்கை கொஞ்சும் இடத்தில் வைத்து அந்த பாடலுக்கு விஜய்-கீர்த்தி சுரேஷ் இருவரும் இணைந்து டூயட் பாடவிருக்கிறார்களாம்.தொடர்ந்து ஹிட் பாடல்ளை கொடுத்து வரும் விஜய்க்கு இந்த பாடலும் சூப்பர் ஹிட் ஆக வேண்டுமென கூடுதலாக உழைக்கிறாராம் சந்தோஷ்நாராயணன்.