18+ only,Click the Like button below to comfirm you are above 18

விஜய் -அஜித் ஹிட் படம் அதிகம் கொடுத்தது யார் ?

0:00 / 05:18

விஜய் -அஜித் ஹிட் படம் அதிகம் கொடுத்தது யார் ?

தமிழ் சினிமாவில் ஒரு இடம் நிச்சயம் உண்டு.அஜித் தான் தற்போது இருக்கிற ஹீரோக்களில் அழகானவர்.அதேபோல் விஜய் போல் நடனம்,காமெடி,சண்டை ஓரளவு நடிப்பு என்று எல்லாவற்றிலும் தனித்திறமை கொண்டவர் தமிழில் இல்லை.

இதை யாரும் மறுப்பதிற்கில்லை.இவர்கள் படங்கள் ஓடுவது எப்படி? இவர்கள் படங்கள் ஓடும் முறை பற்றி பாப்போம்.அஜித்திற்கு ரசிகர்கள் நூறு பேர் என்று வைத்துக்கொள்வோம்.

அந்த நூறு பேருமே முதல் இரண்டு மூன்று நாட்களில் படம் பார்க்க முந்துவார்கள்.அதனால் பட வெளியீடு நாளில் கூட்டம் அள்ளும்.ஆனால் ரசிகர்ள் பார்த்த பின் நடுநிலையாளர்கள்,குடும்பத்தோடு செல்பவர்கள் அஜித் படத்திற்கு செல்வது குறைவு.படம் ரிசல்ட் பார்த்தே வருவார்கள்.அதனால் நான்காம் ஐந்தாம் நாளிலேயே கூட்டம் அடங்கிவிடும்.

விஜய் படங்கள் வேறு.முதல் நாட்களில் முக்கால் வாசி ரசிகர்கள் பார்த்து விடுவார்கள்.பின்பு படம் எப்படி இருந்தாலும் குடும்பத்தோடு வருபவர்கள் விஜய் படத்திற்கு தான் அதிகம்.காரணம் நிச்சயமாக பாட்டு,காமெடி ஓரளவு படம் பார்க்கும் படி இருக்கும்.அதிலும் சில படங்கள் தேறாது.ரசிகர்களை விட்டுவிடுங்கள் நீங்கள் நடுநிலையாளராக இருந்தால் இருவரில் யார் படத்தை அதிகம் பார்த்திருப்பீர்கள் என்று யோசியுங்கள் நான் சொல்வதன் உண்மை புரியும்.

 இருவரின் ஹிட் படங்களை பற்றி பார்ப்போம்.என்ன அளவுகோல்.இருவரின் ஐம்பது படங்கள் எடுத்து கொள்வோம்.சூப்பர் ஹிட், ஹிட், சுமார் படங்களை பிரித்து கொள்வோம்.சரி ஹிட் படங்களில் பலர் வேறு படலாம்.ஏன்.?சிலர் ஒரு படத்தை ஹிட் என்பார்கள்.சிலர் அது பிளாப் படம் என்பார்கள்.அதனால் எல்லோரும் ஹிட் என்று ஒத்துகொள்கிற படங்களை எடுத்து கொள்வோம் .உதாரணமாக விஜய்க்கு கில்லி சூப்பர் ஹிட் என்பதையோ,அஜித்திற்கு வாலி சூப்பர் ஹிட் என்பதையோ எவரும் மறுக்க மாட்டார்கள்.அப்படி பிரிப்போம்